சென்னை : பிரபல நடிகராக வலம் வரும் அதே நேரத்தில் அவ்வப்போது படங்களை இயக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டவர் நடிகர் தனுஷ். அவர் இயக்கிய படங்களில் அவர்தான் கதாநாயகனாக நடித்திருப்பார்.
ஆனால், தானே முன்னின்று நடிக்காமல், இளம் நடிக, நடிகையரைக் கொண்டு, இயக்கி ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார் தனுஷ். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்பது படத்தின் பெயர். ஆங்கிலப் பெயரில் படத்தலைப்பை எழுதும்போது வரும் முதல் எழுத்துகளைக் கொண்டு ‘நீக்’ (Neek) என சுருக்கமாக விளம்பரம் செய்கிறார்கள்.
எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. அதே தினத்தில் வெளியாகிறது பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படம். இந்த மோதலில் எந்தப் படம் வெல்லப் போகிறது என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
அண்மையில் வெளியிடப்பட்ட ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முன்னோட்டம், சுவாரசியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் இசை-முன்னோட்டம் வெளியீட்டு விழாவுக்குக் கூட தனுஷ் வராமல் தவிர்த்து, படத்தில் நடிக்கும் இளம் நடிக – நடிகையரை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.
அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: