Home இந்தியா ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம்: வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட 3 பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம்: வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட 3 பேர் கைது

389
0
SHARE
Ad

players_350_051713110537மும்பை,மே 17 –  ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்தனர்.

ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சந்த்லியா மற்றும் அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களைத் தவிர வேறு எந்த ஒரு அணியின் உரிமையாளருக்கோ, வீரர்களுக்கோ சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்று டெல்லி போலீஸ் விளக்கமளித்துள்ளது.

அவர்களுடன் 7 முகவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

இதில்  சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் என 9 அணிகள் விளையாடி வருகின்றன.

தற்போது இந்த அணிக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.