Home இந்தியா மறைந்த நடிகர் தாராசிங் மகன் விண்டு கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக கைது!

மறைந்த நடிகர் தாராசிங் மகன் விண்டு கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக கைது!

621
0
SHARE
Ad

Vindoo-Dara-Singh---Sliderபுதுடில்லி, மே 21 – ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய தரகர்களும் போலீசில் சிக்கி வருகின்றனர்.

சென்னையில் கைதான தரகர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதுதவிர பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட தரகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் பி.சி.சி.ஐ. செயல்பாடுகளுக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு போலீசார் நடத்திய சோதனையின் போது முன்னாள் மல்யுத்த வீரரும், நடிகருமான தாராசிங்கின் மகன் நடிகர் விண்டு தாரா சிங் (படம்) சிக்கினார்.

சூதாட்டக் கும்பலுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை அவரை கைது செய்தனர். பாலிவுட் நடிகரான விண்டு தாராசிங் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.