Home இந்தியா நாஞ்சில் சம்பத் மகள் திருமண வரவேற்பில் ஜெயலலிதா!

நாஞ்சில் சம்பத் மகள் திருமண வரவேற்பில் ஜெயலலிதா!

495
0
SHARE
Ad

Jayalalitha-Slider--1சென்னை, மே  21 – அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர், நாஞ்சில் சம்பத் மகள், திருமண வரவேற்பில் கலந்து கொண்ட, தமிழக முதல்வர்ஜெயலலிதா பேசாததால், தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

#TamilSchoolmychoice

அ.தி.மு.க., கொள்கைபரப்பு துணைச் செயலராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். இவரது மகள் மதிவதனி, திருமண வரவேற்பு, நேற்று மாலை,  சென்னை, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில்நடந்தது.

முதல்வர் வருகையையொட்டி, அப்பகுதி முழுவதும், பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை, 4:10 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதாவந்தார். அவரை நாஞ்சில் சம்பத் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள்வரவேற்றனர்.

மேடைக்கு வந்த முதல்வர், தயாராக இருந்த, மாலைகளை எடுத்து, மணமக்களிடம் கொடுத்தார். அவர்கள் மாலை மாற்றிக் கொண்டு, முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

அவர்களைவாழ்த்திவிட்டு, முதல்வர் உடனே புறப்பட்டார். அமைச்சர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள், அணிவகுத்து நின்று, முதல்வரை வழியனுப்பினர். வரவேற்புவிழாவில் முதல்வர் பேசுவார் என்று எதிர்பார்த்த அ.தி.மு.க.வினர் ஏமாற்றம்அடைந்தனர்.