Home நாடு நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் 10 பேர் இன்று உறுதிமொழி

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் 10 பேர் இன்று உறுதிமொழி

497
0
SHARE
Ad

Negeri Sembilanசிரம்பான், மே 22 – நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை ஸ்ரீ மெனாந்தியில் உள்ள அரண்மனையில், யாங்டி பெர்த்துவான் பெசார் துவாங்கு முக்ரில் துவாங்கு முனாவீர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளவிருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை அம்மாநில மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ முகமது ஹசான், நேற்று மாலை விஸ்மா நெகிரியில் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுகையில் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் 3 பேரைத் தவிர மற்ற 7 பேர் புதுமுகங்களாவர். இதில் ம.இ.கா வைச் சேர்ந்த எல். மாணிக்கமும் ஒருவர்.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கம் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.