Home அரசியல் பிகேஆர் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

பிகேஆர் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

568
0
SHARE
Ad

pkrகோலாலம்பூர், மே 22 – பிகேஆரின் உட்கட்சித் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இது குறித்து பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுதின் நஸ்தியோன் கூறுகையில்,

“நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தல் ஒரு போர் போன்று இருந்தது. அதை சமாளிக்க நிறைய பணமும், சக்தியும் செலவிடப்பட்டது.

#TamilSchoolmychoice

இப்போது கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

தேர்தல் தான் கட்சிக்கு வலுத்தரும் என்று தலைவர்கள் தீர்மானிக்கும் பட்சத்தில், நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிகேஆரின் உட்கட்சித்தேர்தல், இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. தேர்தலை ஒத்தி வைக்கவும், தேர்தலை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தவும் கட்சிக்கு அதிகாரம் உண்டு.

எனவே வரும் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறவிருக்கும் பிகேஆர் பேராளர் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும். பேராளர் கூட்டத்தில் 2,500 பேராளர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் சைபுதின் தெரிவித்துள்ளார்.