ரமல்லா, ஜுன் 3- பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து பிரதமர் சலாம் பயாத், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி பதவி விலகினார்.
இதனையடுத்து, அடுத்த பிரதமராக யார் தேர்வு செய்யப்படுவார்? என்ற நிலையற்ற தன்மை பாலஸ்தீன மக்களிடையே இருந்தது.
இந்நிலையில், அதிபர் அப்பாஸ் தலைமையிலான ஆளும் ஃபத்தா கட்சி உறுப்பினரான ரமி ஹம்துல்லா (படம்) புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார்.
இதற்கு முன்னதாக அரசியல் மற்றும் அரசு பதவி ஏதும் வகித்த அனுபவமற்றவரான ரமி ஹம்துல்லா இங்கிலாந்தில் கல்வி பயின்று, பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள அல்-நஜா பல்கலைக் கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் ரமி ஹம்துல்லாவுக்கு அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.