Home 13வது பொதுத் தேர்தல் பக்காத்தானைச் சேர்ந்த 88 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை

பக்காத்தானைச் சேர்ந்த 88 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை

524
0
SHARE
Ad

anwar 5

கோலாலம்பூர், ஜூன் 11 – இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில், பக்காத்தானைச் சேர்ந்த 89 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே கலந்துகொண்டுள்ளார். மற்றவர்கள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணிக்கும் விதமாக அதில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஜசெக கட்சியைச் சேர்ந்த பக்ரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எர் தெக் வா மட்டுமே பக்காத்தான் சார்பாக அவ்விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

விளக்கக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, “எதிர்கட்சிகள் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு காரணம் ஏதாவது இருக்கலாம். அதை புறக்கணித்ததாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஒருவேளை இன்று அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் சீருடைக்கும், அடையாள அட்டைக்கும் விண்ணப்பித்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

பதவி ஏற்பில் பங்கேற்கவில்லை என்றால் தகுதியிழப்பது நிச்சயம்

மேலும்  “வரும் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பதவி ஏற்பு நிகழ்வை பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களது மக்கள் பிரதிநிதி என்ற   தகுதியை இழக்க நேரிடும்.

காரணம் மலேசிய அரசியலமைப்புச் சட்டப்படி தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அடுத்த 6 மாதங்களுக்குள் பதவி ஏற்க வேண்டும். ஒருவேளை அவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் பதவி ஏற்கவில்லை என்றால் தானாகவே தகுதி இழப்பு ஏற்படும்” என்று அமின் மூலியா தெரிவித்துள்ளார்.

“இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பதவி ஏற்பு நாளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அது அந்த 6 மாத கால அவகாசத்திற்குள் நடைபெற்று விட வேண்டும்.  தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்வை புறக்கணித்து வந்தால் அது தேசிய ஜனநாயகத்தை கேலி செய்வது போல் ஆகிவிடும். பிறகு நாடாளுமன்றமும் அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க நேரிடும்” என்றும் அமின் மூலியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.