ஜூன் 17- நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாகாணங்கள் என்ன சொன்னாலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் எதனைப் பரிந்துரை செய்தாலும், நான் அதிபராக இருக்கும் வரையில் நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்.
எதிர்காலத்தில் நாடு பிளவுபடுத்தப்படாமல் ஒற்றுமையை கட்டிக்காக்கவே திருத்தங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில் பதவியேற்கும் எந்தவொரு அதிபராலும் நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் சட்டத் திருத்தங்களை செய்யவே விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜபக்ச மேற்கண்ட விளக்கத்தை தெரிவித்தாக சிங்கள பத்திரிகையொன்றின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.