Home 13வது பொதுத் தேர்தல் நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அலாவுதீன் நியமனம்

நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அலாவுதீன் நியமனம்

611
0
SHARE
Ad

awaluddinசிரம்பான், ஜூன் 17 – நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை சேர்ந்த 36 உறுப்பினர்கள் இன்று காலை விஸ்மா நெகிரியில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அலாவுதீன்(படம்) சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னால் சபாநாயகராக இருந்த டத்தோ ரசாக் மன்சோர், பொதுத்தேர்தலில் தனது பெர்டாங் தொகுதியை தக்க வைத்துக்கொள்ளத் தவறியதால் அவருக்குப் பதிலாக அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேசிய முன்னணி போட்டியிட்ட 36 சட்டமன்ற தொகுதிகளில் 22 தொகுதிகளைக் கைப்பற்றியதால், கடந்த மே மாதம் 11 ஆம் தேதி அம்மாநில மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ முகமட் ஹஸ்ஸான் மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றார்.