Home இந்தியா பாமாக ஆதரவு யாருக்கு? நாளை பொதுக்குழுவில் முடிவு – அன்புமணி ராமதாஸ் தகவல்

பாமாக ஆதரவு யாருக்கு? நாளை பொதுக்குழுவில் முடிவு – அன்புமணி ராமதாஸ் தகவல்

1197
0
SHARE
Ad

Tamil-Daily-News_41707575322தர்மபுரி, ஜூன் 20 – எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, சென்னையில் நாளை நடக்கும் பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநிலங்களவைத் தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவளிப்பது என வரும் 21ம் தேதி சென்னையில் நடக்கும் கட்சி பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்.

தர்மபுரியில் பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர், அரியலூர் போன்ற நகரங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அடக்குமுறையை அதிமுக அரசு ஏவி விடுகிறது. சமூக வலைத்தளங்களை நான் பார்ப்பதில்லை. அந்த வலைத்தளங்களில் கூறப்பட்டிருப்பது போல் பசுமை தாயகத்துக்கு ஐ.நா.சபை நிதி கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

.