Home அரசியல் பொதுவான கொள்கையை ஏற்றுக் கொண்டால் பிஎஸ்எம் கட்சி மக்கள் கூட்டணிக்குள் அனுமதிக்கப்படலாம் – அன்வார் அறிவிப்பு

பொதுவான கொள்கையை ஏற்றுக் கொண்டால் பிஎஸ்எம் கட்சி மக்கள் கூட்டணிக்குள் அனுமதிக்கப்படலாம் – அன்வார் அறிவிப்பு

527
0
SHARE
Ad

ANWARகோலாலம்பூர், ஜூன் 20 – மக்கள் கூட்டணியின் பொதுவான கொள்கையை ஏற்றுக் கொள்ள முன்வந்தால் பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சியை மக்கள் கூட்டணியின் ஓர் அங்கமாக அனுமதிப்பதில் பிரச்சனை ஏதும் இல்லை என மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று பாஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் அன்வார் இப்ராகிம் பத்திரிக்கையாளர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்தார்.

“இன்று நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் ஒரு குழுவை நியமித்து பிஎஸ்எம் கட்சியின் குழுவுடன் கலந்து பேச முடிவெடுத்துள்ளோம். எல்லாம் சாதகமாக நடைபெறும் என நம்புகின்றோம்” என்றும் அன்வார் மேலும் கூறினார்.

மக்கள் கூட்டணியின் பொதுக் கொள்கையை பிஎஸ்எம் கட்சி ஏற்றுக் கொண்டால் அடுத்த கூட்டத்திலேயே பிஎஸ்எம் கட்சி மக்கள் கூட்டணிக்குள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்றும் அன்வார் தெரிவித்தார்.

அடுத்த கூட்டம் எப்போது நடைபெறும் என்பதை தற்போதைக்கு கூற முடியாது என்றாலும், அடுத்த வாரத்தில் கூட அந்தக் கூட்டம் நடைபெறக் கூடும் என்றும் அன்வார் இப்ராகிம் கோடிகாட்டினார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிஎஸ்எம் கட்சிக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அன்வார் சுட்டிக் காட்டினார்.