Home இந்தியா உத்தரகாண்ட் வெள்ள சேதத்தை ராகுல் காந்தி இன்று பார்வையிடுகிறார்

உத்தரகாண்ட் வெள்ள சேதத்தை ராகுல் காந்தி இன்று பார்வையிடுகிறார்

612
0
SHARE
Ad

பத்ரிநாத், ஜூன் 24- உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்த மாநிலமே உருக்குலைந்து போனது.

கேதார்நாத் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவாக மாறியது. வான் வழியாகத்தான் மீட்க முடியும் என்ற நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடைபெறுகிறது. மலைகளில் சிக்கித் தவித்தவர்களை ஹெலிகாப்டரில் மீட்டு அழைத்து வருகிறார்கள். இதுவரை கேதார்நாத் பகுதியில் தவித்த 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மழை பெய்தாலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.

Rahul-Gandhi1இதற்கிடையே மற்றொரு புனித தலமான பத்ரிநாத் பகுதியில் 10 ஆயிரம் பேர் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் டேராடூன் ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியூர் பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

உள்ளூர் மக்கள் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் சென்ற போது ஆங்காங்கே பாறைகள் புதர்களிலும் மணலிலும் பிணங்கள் புதையுண்டு கிடந்தன. மீட்கப்பட்ட பிணங்களின் அடிப்படையில் பலியானவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

இதுவரை 1000 பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் உள்ளூர் மக்கள் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. காணாமல் போனவர்களில் சுற்றுலா பயணிகள் 700 பேர் என்றும் உள்ளூர் வாசிகள் 5,000 பேர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி இன்று ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிடுகிறார்.