Home 13வது பொதுத் தேர்தல் இடைத்தேர்தலில் அழியா ‘மை’ பயன்படுத்துவதா? வேண்டாமா? – அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்

இடைத்தேர்தலில் அழியா ‘மை’ பயன்படுத்துவதா? வேண்டாமா? – அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்

566
0
SHARE
Ad

ECகோலாலம்பூர், ஜூன் 28 – கோல பெசுட் இடைத்தேர்தலில், சர்ச்சைக் குரிய அழியா ‘மை’ யை பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தற்போது அழியா மை பயன்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அடுத்த வாரம் நிச்சயம் முடிவு செய்யப்படும்” என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசூப் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் நாடெங்கிலும் பயன்படுத்தப்பட்ட அழியா ‘மை’  ஒரே நாளில் அழிந்தது பல சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது. இந்நிலையில் எதிர்வரும் கோல பெசுட் இடைத்தேர்தலிலும் அது போன்ற சர்ச்சைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அழியா ‘மை’ யை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பலமான யோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, நேற்று திரங்கானு சபாநாயகர் ஸூபிர் எம்போங், கோல பெசுட் தொகுதிக்கான காலியிட அறிவிப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.