Home 13வது பொதுத் தேர்தல் கோல பெசுட் இடைத்தேர்தலுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் – தேர்தல் ஆணையம்

கோல பெசுட் இடைத்தேர்தலுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் – தேர்தல் ஆணையம்

573
0
SHARE
Ad

Kuala-Besut-location-slderகோலாலம்பூர், ஜூலை 1 – கோல பெசுட் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் தேதி குறித்து வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதோடு வேட்பு மனுத்தாக்கல் மற்றும் முன்கூட்டிய வாக்களிப்பு நாள் பற்றியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கமாருதீன் முகமட் பாரியா கூறுகையில், “இடைத்தேர்தல் குறித்து கலந்தாலோசித்த பின்னர், தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜீஸ் முகமட் யூசுப் தேதியை அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினர் ரஹ்மான் மொஹ்தாரின் மறைவிற்குப் பிறகு, ஜூன் 27 ஆம் தேதி அத்தொகுதிக்கான காலியிடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கு வந்ததாகவும் கமாருதீன் குறிப்பிட்டார்.