Home உலகம் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 1 கோடி பேர் பாதிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 1 கோடி பேர் பாதிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்

590
0
SHARE
Ad

aidsஜெனீவா, ஜூலை 1- எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய் கடந்த 32 ஆண்டுகளாக பரவி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். என தெரிய வந்துள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேரை கடுமையான எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

மேலும் வருகிற 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர் அல்லது பாதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவற்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.