Home கலை உலகம் மீண்டும் திரையுலகம் வரும் லைலா

மீண்டும் திரையுலகம் வரும் லைலா

1237
0
SHARE
Ad

ஜூலை 2- கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சினை கொள்ளை கொண்ட லைலா மீண்டும் நடிக்க வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

laila (1)தன் கன்னக்குழி சிரிப்பால் தமிழ்நாட்டை கட்டிப் போட்ட இவர் திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.

பல இயக்குனர்கள் இவரை நடிப்பதற்கு அழைத்தும் எட்டு வயது குழந்தைக்கு தாயாகிவிட்டேன் எனக் கூறி அவற்றையெல்லாம் தட்டிக்கழித்தார் லைலா.

#TamilSchoolmychoice

தற்போது திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்.

தன்னுடைய நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நல்ல கதாபாத்திரம் இருந்தால் நடிப்பதற்கு தாயாராக இருக்கிறாராம்.