Home 13வது பொதுத் தேர்தல் கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடும் – அன்வார் அறிவிப்பு

கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடும் – அன்வார் அறிவிப்பு

451
0
SHARE
Ad

anwar

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 2 – எதிர்வரும் கோல பெசுட் இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி சார்பாக பாஸ் போட்டியிடும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று அறிவித்தார்.

“ஆமாம். அத்தொகுதியில் போட்டியிடப்போவது பாஸ் வேட்பாளர் தான். திரங்கானு மாநில பிகேஆர் தலைவர் இது குறித்து விளக்கமளித்திருப்பார் என்று நம்புகிறேன். பாஸ் வேட்பாளரை நிறுத்துவதற்கு பிகேஆர் சம்மதம் தெரிவித்துள்ளது” என்று நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்ததாக சினார் ஹரியான் பத்திரிக்கை கூறுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் கோல பெசுட் தொகுதியில் போட்டியிடவிருக்கும் பாஸ் வேட்பாளர் யார் என்பதையும் பாஸ் கட்சியே முடிவு செய்யும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

“நான் பாஸ் தலைவர் டத்தோ ஹாடி அவாங்கிடம் பேசிவிட்டேன். பிகேஆர் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்கும்” என்று அன்வார் அறிவித்தார்.

இதனிடையே, இடைதேர்தலைப் புறக்கணிப்பது குறித்து ஜசெக கட்சி, பிகேஆர் தலைவர்களுக்கு ஆலோசனைகள் கூறி வருவதாகவும், அது குறித்து பக்காத்தான் கூட்டத்தில் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு நேற்று மலாய் மெயில் என்ற இணைய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான காலிட் சமட், “இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை. தொடர்ந்து போராடுவோம்” என்று கூறியுள்ளார்.

வரும் இடைதேர்தலில் பாஸ் கட்சி வெல்லும் பட்சத்தில் மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ‘தொங்கு சட்டமன்றம்’ என்ற நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.