Home வணிகம்/தொழில் நுட்பம் விண்டோஸ் 8 இயங்குதளம் விஸ்தா இயங்குதளத்தை விட அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.

விண்டோஸ் 8 இயங்குதளம் விஸ்தா இயங்குதளத்தை விட அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.

770
0
SHARE
Ad

Windows-OS-pie-chartஜூலை 2 – மைக்ரோசோஃப்ட் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய  கணினி இயங்கு தளமான விண்டோஸ் 8 (Windows 8) உலகெங்கும் அதிக அளவில் பயனீட்டாளர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நிறுவனம் அறிமுகப்படுத்திய விஸ்தா (Windows Vista) இயங்குதளம் குறித்து பல்வேறு குறைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் தற்போது விஸ்தாவை விட அதிக அளவில் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

இருப்பினும் ஆப்பிள் (Apple’s OS X) நிறுவனத்தின் ஓ.எஸ்.எக்ஸ் இயங்குதளத்தை விட பயன்பாட்டில் விண்டோஸ் 8 இன்னும் பின்தங்கியே இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

ஜூன் மாத ஆய்வுகளின் படி விண்டோஸ் 8இன் பயன்பாடு 0.83 சதவீதம் அதிகரித்து உலக கணினி சந்தையில் 5.1 சதவீதமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் விண்டோஸ் விஸ்தாவின் பயன்பாடு 0.48 சதவீதம் சரிந்து மொத்த சந்தையில் 4.62 சதவீதமாக இருந்தது.

இருப்பினும் விண்டோஸ் 7 இயங்குதளம் இன்னமும் கணினி பயன்பாட்டாளர்களிடையே பிரபல்யமாக இருந்து வருகின்றது. மொத்த பயன்பாட்டில் ஜூன் மாதத்தில் 0.48 சதவீதம் சரிந்து இன்னமும் 44.37 சதவீத கணினி பயன்பாட்டைக் கொண்டுள்ளது.

விண்டோஸ் எக்ஸ்.பி. இன்னும் முன்னிலையில்…

மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு இயங்குதளமான விண்டோஸ் எக்ஸ்.பி. (Windows XP), அறிமுகப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கணினி சந்தையில் 37.17 சதவீத பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

இருப்பினும் ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான ஓ.எஸ்.எக்ஸ் 7.2 சதவீத பயன்பாட்டில் இருப்பதால், விண்டோஸ் 8ஐ விட இரண்டு சதவீதம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசோஃப்ட் நிறுவனம் ஆக இறுதியாக அறிமுகப்படுத்திய விண்டோஸ் 8 இயங்குதளம், விவேகக் கைத்தொலைபேசிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் கூட பயன்படுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டதாகும்.

இதன்மூலம், இதுவரை கையடக்கக் கருவிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடித்து அந்த விற்பனை சந்தையிலும் கால் பதிக்க மைக்ரோசோஃப்ட் நிறுவனமும் அதன் கூட்டு வர்த்தக நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

100 மில்லியன் உரிமங்கள் விற்பனை…..

இதற்காக, விண்டோஸ் 8ஐ அறிமுகப்படுத்துவதற்காகவே மைக்ரோசோஃப்ட் நிறுவனம் பல நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களை விளம்பரங்களுக்காக செலவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட தொடக்கத்திற்குள்ளாக சுமார் 100 மில்லியன் விண்டோஸ் 8 உரிமங்கள் (லைசென்ஸ்) விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த எண்ணிக்கை உற்பத்தியாளர்கள் மூலமாக செய்யப்பட்டதே தவிர நேரடியாக பயனீட்டாளர்களை சென்றடைந்ததாகத் தெரியவில்லை.

சில புதிய மாற்றங்களால், பயனீட்டாளர்கள் விண்டோஸ் 8ஐ பயன்படுத்துவதை தவிர்த்து விடுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, சில மாற்றங்களோடு விண்டோஸ் 8.1 என்ற பெயரில் அடுத்த கட்ட இயங்குதளத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக மைக்ரோசோஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.