Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனம் ரிங்கிட் 1.26 விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனம் ரிங்கிட் 1.26 விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

584
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 10 – தொலைதூர மலிவு விலைக் கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸ் நேற்று முதல் கோலாலம்பூர் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.

ஒரு ரிங்கிட் 26 காசு விலையில் பங்குச் சந்தையில் நுழைந்த இந்த நிறுவனத்தின் பங்குகள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விலையை விட ஒரு காசு கூடுதலாகும்.

airasiaதூர நோக்கு விமானப் பயணங்களை மலிவு விலைக கட்டணத்தில் வழங்கும் நிறுவனமான இந்நிறுவனத்திற்கு முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் தலைவராக இருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இதன் தலைமைச் செயல்முறை அதிகாரி அஸ்ரான் ஓஸ்மான் ரானி இந்த நீண்ட தூர விமானப் பயணங்களுக்காக கூடுதல் விமானங்கள் வாங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்காசிய நாடுகளை, வட ஆசியா நாடுகளான தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் ஆஸ்திரேலியாவுடனும் மலிவு விலை விமானப் பயணங்களின் மூலமாக இணைக்கும் வர்த்தக முன்னோடியாக விளங்க ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளதாகவும் அஸ்ரான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏர் ஆசியா நிறுவனத்தின் 9.15 மில்லியன் பங்குகள் பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்யப்பட்டு, இறுதியில் 1 ரிங்கிட் 25 காசு விலையில் முடிவடைந்தது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 3 பில்லியன் மலேசிய ரிங்கிட்டாகும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதன் மூலம் கிடைக்கப் பெற்ற 740 மில்லியன் ரிங்கிட் தொகையில் மூன்றில் ஒரு பகுதி இந்நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.

மேலும், தாய்லாந்திலும், இந்தோனிசியாவிலும் இந்நிறுவனத்தின் புதிய வர்த்தக  மையங்கள் அமைக்கப்படுவதற்கும் இந்த முதலீட்டு தொகை பயன்படுத்தப்படும்.

எஞ்சிய தொகை வங்கிக் கடன்களை திரும்ப செலுத்துவதற்கும் நடப்பு செலவினங்களுக்கும் பயன்படுத்தப்படும்.