லண்டன், ஜூலை 11– இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மகன் இளவரசர் வில்லியம்ஸ். இவர் கேத்தரினை மணந்தார். தற்போது கேத்தரின் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். பிரசவத்துக்காக அவர் மத்திய லண்டனில் உள்ள பட்டிங்டான் செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கர்ப்பமானதில் இருந்து வில்லியம்ஸ்–கேத்தரின் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் இங்கிலாந்து மக்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். கேத்தரின் கர்ப்பமாக இருக்கும் தகவலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்து அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியானதை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். அவர் என்ன சாப்பிடுகிறார் எங்கு போகிறார், அரண்மனையில் எப்படி நடத்துகிறார்கள் என்பன பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
தற்போது உச்சக்கட்டம் நெருங்கி விட்டது. கேத்தரினுக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. அவருக்கு வருகிற 13–ந் தேதி (சனிக்கிழமை) குழந்தை பிறக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கேத்தரினுக்கு பிறக்கப் போவது ஆணா? பெண்ணா? என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி இங்கிலாந்தில் பெரிய அளவில் சூதாட்டமே நடக்கிறது. இளவரசர் தான் பிறப்பார் என்று ஒரு சாராரும், இளவரசிதான் பிறப்பார் என்று ஒரு சாராரும் பணம் கட்டி சூதாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறி பணம் கட்டியுள்ளனர். அரண்மனையில் பெண் வாரிசுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்றும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இந்த சூதாட்டத்தில் பெருமளவு பணம் விளையாடுவதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். பையன் பிறந்தால் அலெக்சாண்டிரா என்று பெயர் சூட்டுமாறு பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் பிறந்தால் கேர்லோட், டயானா, எலிசபெத் விக்டோரியா ஆகிய பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் கேத்தரின் சகோதாரர் ஜேம்ஸ் பெயரைத்தான் குழந்தைக்கு சூட்டுவார் என்றும் பந்தயம் சூட்டியுள்ளனர்.
இங்கிலாந்து அரண்மனைக்கு புதிய வரவு ஆணா? பெண்ணா? என்று மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.