Home கலை உலகம் இந்திய சினிமா நூற்றாண்டு விழா: அமிதாப், ஷாருக்கானுக்கு அழைப்பு

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: அமிதாப், ஷாருக்கானுக்கு அழைப்பு

654
0
SHARE
Ad

ஜூலை 16- இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மும்பை ஹிந்திப் படவுலகின் நாயகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Big-B-SRK-invit8655அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் எங்களது விருந்தினர் பட்டியலில் உள்ளனர். இருவரையும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஒத்துழைப்பு அளிக்கும்படிக் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களும் இதற்கு நேரம் ஒதுக்கி வருவார்கள் என்று நம்புகின்றோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக கழகத்தின் தலைவர் சி.கல்யாண் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேரு உள்அரங்கில், மூன்று நாள் நிகழ்ச்சிகளாக நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படத் துறையினர் பங்கு பெறுவர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

100_years_of_south_cinemaமுதல் நாள் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் மலையாளத்துறைக்கு ஒதுக்கப்படுகின்றது. இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் தெலுங்கு, கன்னடத் திரைத்துறையினருக்கு ஒதுக்கப்படும். மூன்றாவது நாள் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களின் தபால்தலைகள் வெளியிடப்படும் என்று கல்யாண் கூறினார்.

பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந்நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கின்றார்கள். இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டினை சிறப்பிக்கும் விதத்தில் ஒரு பாடலை இசையமைக்கச் சொல்லி இருவரையும் கேட்டுள்ளோம்.

இதுகுறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆயினும், விரைவில் அந்தப் பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்தப் பாடல் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அரங்கத்தில் நிகழ்த்தப்படும் என்றும் கல்யாண் தெரிவித்தார்.