இஸ்லாமாபாத், ஆக. 1– பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரப் பல்வேறு வழக்குகளில் சிக்கி தவிக்கிறார்.
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, அவசர சட்டத்தின் மூலம் 60 மூத்த நீதிபதிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கம் செய்தது, பாகிஸ்தான் தலைவர் நவாப் அக்பர் புக்டி கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இஸ்லாமாபாத் அருகே சவுக் ஷாஸாத் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கும் பண்ணை வீட்டில் தாக்குதல் நடத்த தலிபான்கள் மற்றும் சிபா–இ–ஷகாபா ஆகிய தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இது அனுப்பபட்டுள்ளது. தாக்குதல் நடத்த வரும் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் போன்று மாறு வேடத்தில் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முஷாரப் அதிபராக இருந்த போது கடந்த 2007–ம் ஆண்டில் லால் மஸ்ஜித்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100–க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அதையடுத்து முஷாரப்பை கொல்ல தீவரவாதிகள் திட்ட மிட்டுள்ளனர். முஷாரப்பை ‘சாத்தான்’ என வர்ணித்து வருகின்றனர்.