Home கலை உலகம் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது!

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது!

657
0
SHARE
Ad

James-Vasanthan-being-arrested-by-Chennai-Policeசென்னை, ஆகஸ்ட் 5 – பக்கத்து வீட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவி பிரசாத். இவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை காவல்துறை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர்.

எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட்டார். நான் தரமறுத்துவிட்டேன். என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.