Home வாழ் நலம் ஆவாரம் பூ அழகு குறிப்புகள்

ஆவாரம் பூ அழகு குறிப்புகள்

5781
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 6- உடலுக்குப் பொன் நிறத்தைக் கொடுத்து நல்ல மினுமினுப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது ஆவாரம் பூ.
நெற்றியில் வரி, சுருக்கங்கள், தலைக்கு டை அடிப்பதால் ஏற்படும் கருமை திட்டுக்கள் இவையெல்லாம் அழகைக் கெடுத்துவிடும்.

இதற்கு 100 கிராம் புதிதாக பறித்த ஆவாரம் பூவை அரைத்து சாறாக்கி, ஓசை வரும் வரை காய்ச்சி, 100 கிராம் பாதாம் எண்ணையைக் கலந்து கொள்ளுங்கள்.

Aavaram Pooஇந்த எண்ணெயை கருமை படர்ந்த இடங்களில் குளிப்பதற்கு முன்பு தடவி வர , ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம் ஆகியவையும் மறைந்துவிடும்.

#TamilSchoolmychoice

முகம், கைகளில் பனிக்காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக உண்டாகும் மங்கு,தேமல் போன்றவற்றை போக்கி அழகைக் கூட்டுகிறது ஆவாரம் பூ.

ஆவாரம் பூ – 100 கிராம், வெள்ளரி விதை – 50 கிராம், கசகசா – 50 கிராம் இந்த மூன்றையும் அரைத்துக் கொள்ளுங்கள்.

aavarampooஇதை கட்டியாக போல கலக்கும் அளவுக்கு பால் சேர்த்து, மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் வாரம் இருமுறை தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் ஒரே மாதத்தில் அத்தனையும் மறைந்து, உடலின் கருமை நிறம் போக்கி வெண்மை நிறம் போல பளபளக்கும்.

உடம்பில் தேவையில்லாத இடங்களில் முடி வளரும்போது, கருப்பான தோற்றம் ஏற்படும். இதற்கு லேசர் சிகிச்சை செய்து கொள்ளும்போது தோல் தடித்து மேலும் கருப்பாகிவிடும்.

இத்தகைய பிரச்னைக்கும் வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கு-250 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ – 100 கிராம், பூலான்கிழங்கு – 100 கிராம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இந்த அரைத்த துகள்களை தேய்த்துக் குளிக்கும்போது தேவையில்லாத முடி உதிர்ந்து சருமம் பளிச்சென மின்னும். இவ்வாறு செய்து வந்தால், முகமும் உடலும் பொழிவு பெறுவதோடு உற்சாகமடையும்!