Home நாடு பத்துமலையில் இனி உடற்பயிற்சி செய்யத் தடை! அரைகுறை ஆடையால் பல புகார்கள்!

பத்துமலையில் இனி உடற்பயிற்சி செய்யத் தடை! அரைகுறை ஆடையால் பல புகார்கள்!

662
0
SHARE
Ad

Batu-Caves-temple-Sliderபத்துமலை, ஆகஸ்ட் 13 – பத்துமலையில் இனி யாரும் அரைகுறை ஆடையுடன் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப் படமாட்டாது என்று ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா நேற்று அறிவித்துள்ளார்.

பத்துமலையில் தினமும் காலையிலும், மாலையிலும் நிறைய மக்கள் படிகளில் ஏறி, இறங்கியும், ஆங்காங்கே நின்று கொண்டும் உடற்பயிற்சி செய்து வந்தனர். அவர்களில் பலர் அரைக்கால் சட்டையும், இறுக்கமான மேல் சட்டையும் அணிந்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இது போன்ற அரைகுறை ஆடைகள் அணிந்து படிகளில் நின்று பலர் உடற்பயிற்சி செய்வதால், சாமி கும்பிட வரும் பக்தர்களிடமிருந்து தொடர்ச்சியாக பல புகார்கள் வருவதாக ஆலய நிர்வாகம் கூறுகிறது.

#TamilSchoolmychoice

எனவே, கண்ட இடங்களில் எச்சில் துப்புவதையும், அரைகுறை ஆடைகள் அணிந்து பலர் வருவதையும், குறிப்பாகப் பெண்கள் குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு கைகளில் செல்லப்பிராணிகளை கொண்டு வருவதையும் தடுக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தைப்பூசம் போன்ற விழாக் காலங்களில் பக்தர்கள் குட்டைப் பாவாடை மற்றும் அரைக்கால் சட்டைகளுடன் தங்கள் நேர்த்திக் கடனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அது போன்ற விழாக்காலங்களில் மட்டும் அது விதிவிலக்கு என்றும் ஆலயப் பணிக்குழுத் தலைவரான என்.சிவகுமார் கூறியுள்ளார்.

மேலும், இனி உடற்பயிற்சி செய்ய வருபவர்கள் பத்துமலை வளாகத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு செல்லுமாறும் ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.