Home உலகம் ஜிம்பாப்வேயின் அதிபராக 7-வது முறையாக ராபர்ட் முகாபே பதவியேற்பு

ஜிம்பாப்வேயின் அதிபராக 7-வது முறையாக ராபர்ட் முகாபே பதவியேற்பு

637
0
SHARE
Ad

ஹராரே, ஆக. 23- ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.

Mugabe_2338710bஇந்த தேர்தலில் 89 வயதான அதிபர் ராபர்ட் முகாபேவை எதிர்த்து பிரதமரும் எதிர்கட்சித்தலைவருமான வேங்கிராய் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் 61 சதவிகித வாக்குகளை அதிபர் முகாபேயும், 34 சதவிகித வாக்குகளை வேங்கிராயும் பெற்றனர்.

#TamilSchoolmychoice

ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வேங்கிராய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அரசியலமைப்பு நீதிமன்றம் பின்னர் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து நேற்று ராபர்ட் முகாபே 7-வது முறையாக அதிபராக பதவியேற்ற்றுக்கொண்டார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜிம்பாப்வேயின் அதிபராக இருக்கப்போகும் முகாபே இந்த தேர்தலை ஏற்றுக்கொள்ளாத மேற்கத்திய நாடுகளான பிரிட்டன் மற்றும் அமேரிக்காவை தாக்கி பேசினார்.

எதிர் கட்சித்தலைவர் வேங்கிராய், முகாபேயின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை.