Home இந்தியா ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற மோடி திட்டம்: திக்விஜய் சிங் தாக்கு

ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற மோடி திட்டம்: திக்விஜய் சிங் தாக்கு

567
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 23- பாரதீய ஜனதாவின் பிரச்சாரக்குழு தலைவரான நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் தொடர்ந்து தாக்கி வருகிறார்.

நேற்று சர்வாதிகாரி ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு அவர் சாடினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

narendra_modi_1354621443_540x540ஆட்சியின் அதிகாரத்தை பிடிக்க மோடி சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றுகிறார்.

#TamilSchoolmychoice

இதற்கான நிறைய ஒற்றைமைகள் அவரது நடவடிக்கையில் இருப்பதை நான் காண்கிறேன்.

குஜராத்தில் பாரதீய ஜனதா மிகச்சிறியதாக மாறியிருக்கிறது. ஆனால் மோடி மட்டுமே அங்கு பிரபலமாகி வருகிறார்.

அதுபோன்று மத்தியப்பிரதேசத்தில் ஷிவ்ராஜ் சிங் சவுகானும், சத்திஷ்கரில் ராமன் சிங் மட்டுமே தெரிகிறார்கள்.

164501Digvijay_Singhஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற மோடி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். இதுகுறித்து யாரும்ஆச்சரியப்படக்கூடாது.

காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க நினைக்கும் மோடியின் கனவு
ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினார்.