Home கலை உலகம் விஜய் ஆண்டனிக்கு திருமணம்!: அழைப்பிதழ் வெளியீடு

விஜய் ஆண்டனிக்கு திருமணம்!: அழைப்பிதழ் வெளியீடு

704
0
SHARE
Ad

ஆக. 24- இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் திருமணமா? என அதிர்ச்சியாக இருக்கிறதா?. இது, நிஜ திருமணம் இல்லை.

vijay-anthony‘நான்’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘சலீம்’ என்ற படத்திற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு. அந்த திருமணத்திற்கான அழைப்பிதழை தற்போது படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். அதில், படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன.

விஜய் ஆண்டனி, இப்படத்தில் சலீம் என்ற பெயரில் டாக்டராக நடிக்கிறார் என்பதும், நடிகை அக்ஷா, நிஷா என்ற பெயரில் விஜய் ஆண்டனியின் வருங்கால மனைவியாக நடிக்கிறார் என்பதும் இப்போது தெளிவாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ 9, ஸ்ரீ கிரீன் மற்றும் விஜய் ஆண்டனியின் பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய 3 தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்த திருமண அழைப்பிதழ் படத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அப்படி என்னதான் முக்கியத்துவம்? என்பதை வெள்ளித்திரையில் விரைவில் காணலாம்.

ஏற்கெனவே, ‘ராஜாராணி’ படத்தில் ஆர்யாவுக்கும், நயன்தராவுக்கும் திருமணம் என அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, பரபரப்பை உண்டாக்கினார்கள். அந்த வரிசையில் தற்போது ‘சலீம்’ படத்திலும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு, பரபரப்பை ஏற்படுத்தவே படக்குழுவினர் இந்த அழைப்பிதழை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.