Home வணிகம்/தொழில் நுட்பம் மைக்ரோசோஃப்ட் தலைமைச் செயல்முறை அதிகாரி ஸ்டீவ் பால்மர் 12 மாதங்களுக்குள் பதவி ஓய்வு பெறுவார்!

மைக்ரோசோஃப்ட் தலைமைச் செயல்முறை அதிகாரி ஸ்டீவ் பால்மர் 12 மாதங்களுக்குள் பதவி ஓய்வு பெறுவார்!

743
0
SHARE
Ad

Steve-Ballmer-Featureஆகஸ்ட் 25 – மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக நீண்ட காலமாக பணியாற்றிவரும் ஸ்டீவ் பால்மர் அடுத்த 12 மாதங்களுக்குள் பதவி ஓய்வு பெறுவார் என அந்த நிறுவனம் யாரும் எதிர்பாராத விதத்தில் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது.

#TamilSchoolmychoice

சிறப்புக் குழுவொன்று புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் வரை ஸ்டீவ் பால்மர் பதவியில் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற பதவிமாற்றத்திற்கு இதுவே தக்க தருணம் என்று கருதுகின்றேன். மிகுந்த திறன்வாய்ந்த மூத்த நிர்வாகிகளைக் கொண்ட நிர்வாகம் தற்போது புதிய வியூகங்களை வகுத்துள்ளது. எனது முந்தைய எண்ணங்களின்படி பதவி ஓய்வு பெற்றால் அது நிறுவனத்தின் உருமாற்றத் திட்டத்தின் அமுலாக்கத்தின்போது நடுவில் இடையூறு ஏற்படுத்தும். அதனால், இந்த நிறுவனத்தை புதிய பாதையில், புதிய கோணத்தில் செலுத்த, நீண்ட காலத்திற்கு தனது கடமையைச் செய்யக்கூடிய  தலைமைச் செயல்முறை அதிகாரி ஒருவர் இந்த காலகட்டத்தில் நமக்குத் தேவை” என நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை அறிக்கையில் ஸ்டீவ் பால்மர்  தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியை சிறப்புக் குழுவொன்றை கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும், ஸ்டீவ் பால்மரின் பதவி ஓய்வு எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பில் கேட்சுக்குப் பிறகு பதவி ஏற்றவர்

microsoft_505_041013081432கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரியில் மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பதவி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஸ்டீவ் பால்மர் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பதவியேற்றார்.

ஸ்டீவ் பால்மரின் பதவிக் காலத்தில் விண்டோஸ் எக்ஸ்.பி (Windows XP) மற்றும் விண்டோஸ் எக்ஸ்.போக்ஸ் 360 போன்ற மென்பொருட்கள் வெற்றிகரமாக அறிமுகப்பட்டுத்தப்பட்டன. மேலும் பல மென்பொருட்களும், திட்டங்களும் அவரது தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் ஆப்பிள், கூகுள், அமேசோன் போன்ற நிறுவனங்களின் பங்குகள் பன்மடங்கு மதிப்பு உயர்ந்துள்ள நிலையில் மைக்ரோசோஃப்ட் நிறுவனப் பங்குகளோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், அதே மதிப்பிலேயே இருந்து வருகின்றன.

தனது பதவி ஓய்வு தொடர்பாக அவர் நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில்,“எனது பதவிக்காலத்தில் அடைந்த சாதனைகள் குறித்து பெருமிதம் அடைகின்றோம். 7.5 மில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தை காலப்போக்கில் 78 பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக உயர்த்திக்காட்டினோம். 30 பணியாட்களோடு இருந்த நிறுவனம் இப்போது ஒரு லட்சம் பணியாட்களைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய வெற்றிகளை அடைவதற்கும் நானும் எனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றேன் என்பதில் பெருமையடைகின்றேன். தற்போது நமக்கு ஒரு பில்லியன் பயனீட்டாளர்கள் இருக்கின்றனர். நமது பங்குதாரர்களுக்கு நாம் ஏராளமான இலாபத்தை ஈட்டித் தந்திருக்கின்றோம். நமது பங்குதாரர்களுக்கு இதுவரை சரித்திரத்தில் எந்த நிறுவனமும் செய்யாத அளவிற்கு இலாபத்தை வழங்கியிருப்பதோடு, ரொக்கப் பணத்தையும் திருப்பிக் கொடுத்திருக்கின்றோம்” என்றும் கூறியிருக்கின்றார்.