Home கலை உலகம் நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம்?

நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம்?

803
0
SHARE
Ad

சென்னை, ஆக. 30– நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டதாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

anjali_11_109200754939123அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சித்தி வீட்டில் இருந்து வெளியறி மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு ஐதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்கு மூலம் அளித்தார். சித்தி கொடுமையால் வெளியேறியதாகவும் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். 5 நாட்கள் யாருடன் இருந்தார் என்பதை அவர் வெளியிடவில்லை.

காதலனுடன் தங்கி இருந்த விவரமும் பிறகு அவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட விஷயமும் தற்போது அம்பலமாகி உள்ளது. அஞ்சலி காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் ஆந்திராவில் உள்ள பிரபல அரசியல் வாதி ஒருவரின் மருமகன் என தெரிய வந்துள்ளது. அரசியல் வாதியின் மகன் தெலுங்கு பட தயாரிப்பாளராக உள்ளார்.

#TamilSchoolmychoice

அவருக்கு அரசியல் வாதியின் மருமகன் உதவியாக இருந்தாராம். அப்போது அஞ்சலிக்கும் அரசியல்வாதி மருமகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. காதலை பிரிக்க அரசியல்வாதி பெரும் முயற்சி எடுத்தாராம்.

ஆட்களை ஏவியும், மிரட்டினாராம். ஆனால் மருமகன் அஞ்சலி ஜோடி பயப்படவில்லை. காதலில் உறுதியாக இருந்தனர். பின்னர் திருமணமும் செய்து கொண்டார்கள். இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.