Home வணிகம்/தொழில் நுட்பம் கூகுள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு துணைத் தலைவர் பதவி விலகுகிறார்

கூகுள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு துணைத் தலைவர் பதவி விலகுகிறார்

630
0
SHARE
Ad

வாஷிங்டன், ஆக.31- கூகுள் நிறுவனம் அமெரிக்க நாட்டில் இயங்கிவரும் இணையதள சேவைகள் மற்றும் தயாரிப்புகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு வர்த்தக நிறுவனமாகும்.

RTX11XC4இந்த நிறுவனத்தின் இயக்கங்களில் இணையதளத் தேடல், கிளவுட் கம்ப்யூட்டிங், மென்பொருள் விற்பனை மற்றும் இணையதள விளம்பரத் தொழில்நுட்பங்களும் அடங்கும்.

இந்த நிறுவனத்தின் ஆன்டிராய்டு தயாரிப்புப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவராக இருந்துவருபவர் ஹுகோ பர்ரா (படம்) என்பவர்.

#TamilSchoolmychoice

இவர் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்ற மூன்று வருடங்களாக ஆன்டிராய்டு பிரிவின் நிர்வாகத்துறையின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

hugo-barra-google-new-nexus-7-launch-533x400இவர் தற்போது இந்நிறுவனத்திலிருந்து விலகி சீனாவின் ‘ஸ்மார்ட்போன்’ தயாரிப்பு நிறுவனமான சியாவோமியில் இணைய விருப்பதாக தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சியாவோமி, ஸ்மார்ட்போன் உலகின் ஒரு புது வரவாகும். அந்நிறுவனம் விரைவாக உள்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இணையதளத்திலும், வெளி சந்தையில் குறைந்த அளவிலும் விற்பனை செய்வதன்மூலம் இந்நிறுவனம் தனக்கெனத் தேவைகளை உருவாக்கிக்கொள்ளும் விற்பனை உத்தியைப் பயன்படுத்தி வருகின்றது.

இந்த வர்த்தக ஆண்டின் முதல் அரை இறுதியில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பான எம்ஐ 2எஸ் விற்பனையில் முன்னிலை வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.