லண்டன், செப். 10- ரசாயன ஆயுதம் விவகாரத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முடிவு செய்துள்ளார்.
லண்டன் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியிடம், சிரியா அரசு ஏதாவது முயற்சி அல்லது உறுதி அளித்தால் தாக்குதலை நிறுத்த வழி உண்டா? என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘சிரியாவிடம் இருக்கும் ரசாயன ஆயுதங்கள் முழுவதையும் அதிபர் ஆசாத் ஒப்படைக்க முன்வந்தால் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம்’ என்றார். ‘அவை முழுவதையும் தாமதம் செய்யாமல் உடனே ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் அவர் அதை செய்ய மாட்டார். அது நடக்க கூடியதல்ல’ என்றும் அவர் பதில் அளித்தார்.