Home கலை உலகம் மீண்டும் மனைவியுடன் இணைய விரும்பும் விஷ்ணு!

மீண்டும் மனைவியுடன் இணைய விரும்பும் விஷ்ணு!

709
0
SHARE
Ad

செப். 10- ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு.

தொடர்ந்து, ‘குள்ளநரிக்கூட்டம்’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களில் நடித்தார்.

actor_vishnu_kullanari_koottam_stills_02தற்போது ‘வீரதீர சூரன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

#TamilSchoolmychoice

இவரது மனைவி ரஜினி நடராஜ் திரைப்படத் துறையில் ஆடை வடிவமைப்பு கலைஞராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ‘நீர்ப்பறவை’ படத்தில் சீனுராமசாமியிடம் உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வணக்கம் சென்னை’ படத்திலும் ஆடை வடிவமைப்பில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

தன்னுடைய மனைவியின் வேலைத் திறமையை பார்த்து வியந்த விஷ்ணு, தன்னுடைய மனைவியின் ஆடை வடிவமைக்கும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்.

‘வணக்கம் சென்னை’ படத்தில் ரஜினியின் தேர்வு வண்ணமயமாக இருக்கிறது. இதுபோன்றதொரு வாய்ப்புக்காக தான் காத்திருப்பதாகவும் இணையதளத்தில் கூறியுள்ளார்.