Home நாடு 100 நாட்கள் சிறைவாசம்! போராட்டம் இன்னும் முடியவில்லை! – உதயகுமார் அறிக்கை

100 நாட்கள் சிறைவாசம்! போராட்டம் இன்னும் முடியவில்லை! – உதயகுமார் அறிக்கை

644
0
SHARE
Ad

uthayakumarகாஜாங், செப் 13 –  தேச நிந்தனை குற்றத்திற்காக காஜாங் சிறையில் கடந்த 100 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார், சிறைவாசம் குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயகுமார் பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நான் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எனது போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் இந்த சிறை தண்டனையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் உட்பட, மனிதாபிமானத்தோடு தன்னை சந்திக்க வரும் அனைவரையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“என்னை சந்திக்க முயற்சி செய்து வரும் லிம் குவான் எங் அவர்களை வரவேற்கிறேன். அதோடு சுஹாகாம், வழக்கறிஞர் மன்றம், பக்காத்தான் நாடாளுமன்ற மனித உரிமைக் குழு ஆகியோரையும் என்னை சந்திக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறையில் தனக்கு நடக்கும் முறைகேடுகள் குறித்தும், தனது வாழ்க்கை குறித்தும் நீண்ட கடிதத்தையும் உதயகுமார் எழுதியுள்ளார்.