Home கலை உலகம் ‘ராஜா ராணி’-யில் ஓணம் கொண்டாடிய நயன்தாரா

‘ராஜா ராணி’-யில் ஓணம் கொண்டாடிய நயன்தாரா

1398
0
SHARE
Ad

செப். 17-ச்ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜா ராணி’ படம் வருகிற 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

Nayanthara-Traditional-Kerala-Style-Saree-Photosஇப்படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

படம் ஆரம்பித்த நாள் முதலே இப்படம் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இப்போது இப்படம் பற்றிய இன்னொரு புதிய தகவலும் வெளிவந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அதாவது இப்படத்தில் நயன்தாரா மலையாளத்து பெண்ணாகவே வருகிறாராம். இவர் மலையாள பெண்களுடன் ஆடிப்பாடும் ஓணம் பாடல் ஒன்று இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடலில் ஓணம் பண்டிகையின் பெருமைகள் சொல்லப்பட்டு அதற்கான காட்சிகளும் இடம்பெறுகிறது. நயன்தாரா வெள்ளை பட்டு உடுத்தி குடும்ப குத்துவிளக்காக ஆடியிருக்கிறாராம்.

வெளியீடுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும்பட்சத்தில் படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.