Home 13வது பொதுத் தேர்தல் ஆவி வாக்காளர்கள் குறித்த சந்தேகத்தை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை – சார்லஸ் சந்தியாகோ குற்றச்சாட்டு

ஆவி வாக்காளர்கள் குறித்த சந்தேகத்தை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை – சார்லஸ் சந்தியாகோ குற்றச்சாட்டு

468
0
SHARE
Ad

SANTIAGOகோலாலம்பூர், செப் 18 – கடந்த மே 5 பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் நாள் அன்று ஒரு பேருந்து நிறைய வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவி வாக்காளர்களாக அழைத்து வரப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க மறுத்துவிட்டது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இன்று தெரிவித்தார்.

“நான் தேர்தல் ஆணையத்தை அழைத்து இந்த ஆவி வாக்காளர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கூறினேன். ஆனால் அவர்கள் 5 மணியோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது என்று கூறிவிட்டார்கள்” என்று இன்று பெர்சே அமைப்பால் நடத்தப்பட்ட  ‘பொதுத்தேர்தல் குறித்த மக்களின் கண்ணோட்டம்’ என்ற நிகழ்வில் சார்லஸ் கூறினார்.

தேர்தல் அன்று, பண்டாமாரானில் உள்ள பள்ளியொன்றில், வாக்களிப்பதற்காக அழைத்துவரப்பட்ட 18 பேர் இருந்த பேருந்து ஒன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து ஆத்திரத்துடன் தாக்கினர். அந்த 18 பேரில் 17 பேர் வெளிநாட்டவர்கள் என்ற சம்பவத்தை சார்லஸ் அந்நிகழ்வில் விவரித்தார்.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் ஆவி வாக்காளர்களா என்பது  குறித்து விசாரணை நடத்த வாய்ப்பு இருந்தும் தேர்தல் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தவில்லையே ஏன்? என்று சார்லஸ் கேள்வி எழுப்பினார்.