Home சமயம் மேல்மருவத்தூர் சித்தர்பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் இன்று மலேசிய வருகை!

மேல்மருவத்தூர் சித்தர்பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் இன்று மலேசிய வருகை!

969
0
SHARE
Ad

01752967-bc55-438c-ab43-20827be0185b_S_secvpfகோலாலம்பூர், செப். 19- மலேசிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கம், எதிர்வரும் 22.9.2013ஆம் நாள் ஞாயிற்றுகிழமை, நம் நாட்டின் தேசிய தின விழாவை முன்னிட்டு நாடு வளம்பெற மக்கள் நலம்பெற மாபெரும் ஆன்மிகப் பால்குட ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வூர்வலத்திற்கு மேல்மருவத்தூர் சித்தர்பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் எழுந்தருளி பக்தர்களுக்கு நேரடியாக ஆசி வழங்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து, அருள்திரு பங்காரு அடிகளார் இன்று (19.9.2013) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு மலேசிய அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைவார்.

#TamilSchoolmychoice

அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு நல்க ஏற்பாடுகள் செய்யபெற்று வருகிறது.