Home நாடு அராப் மலேசியன் வங்கி நிறுவனர் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி கைது!

அராப் மலேசியன் வங்கி நிறுவனர் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி கைது!

881
0
SHARE
Ad

Hussain-Ahmad-Najadiகோலாலம்பூர், செப் 23 –  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அராப் மலேசியன் வங்கி நிறுவனர் உசைன் நஜாடி சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றவாளியை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

பேராக் மாநிலம் தைப்பிங்கில் உள்ள ஒரு வீட்டில் அந்த 44 வயதான நபருடன் சேர்த்து மேலும் இருவரை அதிகாலை 12.30 மணியளவில் காவல்துறை கைது செய்தது.

அந்த இருவரும் கொலையாளிக்கு பல உதவிகள் செய்திருப்பவர்கள் என்று தாங்கள் சந்தேகிப்பதாக தேசிய காவல்துறை தலைவர் காலிட் அபு பக்கார் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த குற்றவாளி காவல்துறையிடமிருந்து தப்பித்துவிட முயற்சி செய்தார் என்றும், ஆனால் சட்டத்தின் இரும்புக் கரம் குற்றவாளியை பிடித்துவிட்டது என்றும் காலிட் தெரிவித்தார்.

“குற்றவாளிகள் மூன்று பேரும் கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இனி இந்த கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணைகள் நடத்தப்படும்” என்றும் காலிட் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி லோரோங் செய்லானில் உள்ள குவான் யின் கோயில் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில், உசேன் (வயது 75) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி சியோங் மெய் குவென் (வயது 49) காயமடைந்தார்.