Home வணிகம்/தொழில் நுட்பம் விளம்பர வருமானங்களில் டோனி, சச்சினை முந்துகிறார் விராட் கோலி

விளம்பர வருமானங்களில் டோனி, சச்சினை முந்துகிறார் விராட் கோலி

623
0
SHARE
Ad

மும்பை, செப். 27- இந்திய கிரிக்கெட் விளையாட்டில் தனது திறமையால் உயர்ந்துவரும் விராட் கோலி விளம்பர வருமானங்களிலும் தொடர்ந்து உயர்நிலையை அடைகின்றார்.

கேப்டனுக்குரிய தகுதிகளை வளர்த்து வரும் இந்த இளைஞர் தனது தோற்றத்தாலும், அணுகுமுறையாலும் ஆண்டுக்கு 10 கோடி வருமானம் தரக்கூடிய ஜெர்மனியின் மாபெரும் விளையாட்டு நிறுவனமான அடிடாசின் விளம்பர ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.

latest-hd-wallpapers-of-virat-kohli-16இதன்மூலம் இந்த நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் காலணிகள் விளம்பரங்களில் இன்னும் மூன்று வருடங்களுக்கு விராட் கோலி தோன்றுவார்.

#TamilSchoolmychoice

எந்த இந்திய விளையாட்டு வீரருக்கும் இது ஒரு லாபகரமான வருமானம் ஆகும். அடிடாசின் விளம்பரங்களில் வரும் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்வின் முடிவுக் காலத்தில் இருப்பது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

எனினும் அந்நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் இதுகுறித்து அணுகப்பட்டபோது அவர் கருத்து எதுவும் கூறவில்லை என்று தெரிகின்றது.

இதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வா ஆகியோரை தங்களது நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத் தூதுவர்களாக கொண்டுள்ள பிரபல டயர் நிறுவனம் ஒன்று 6.5 கோடிக்கு தற்போது விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

article-2196496-14C69D07000005DC-89_634x423இந்த வருட இறுதியில் 25 வயதினைப் பூர்த்தி செய்யும் விராட் கோலியின் சென்ற வருட விளம்பர வருமானமே 40 கோடி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்தப் புதிய ஒப்பந்தங்களின் மூலம் அவர் இந்தியக் கேப்டன் டோனி, சச்சின் வருமானங்களையே முந்தக்கூடும். ஏற்கனவே, பெப்சி, டொயோட்டா, சிந்தால் டியோடிரன்ட்ஸ் உள்ளிட்ட 13 நிறுவன விளம்பரங்களில் விராட் கோலி தோன்றுகிறார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு விராட் கோலி நைக் அமெரிக்க நிறுவனத்துடன் ஐந்து வருட ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால், இது சுமூகமாக இல்லாததினால் இந்த நிறுவனம் கோலி தங்களுடைய ஒப்பந்தத்தை இடையில் மறுத்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இதனை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், விராட் கோலிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கி, அவர் மற்ற விளையாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.