ஜசெக கிறிஸ்தவ மதத்தை பரப்புகிறது என்பது அப்பட்டமான பொய் – அன்வார் கருத்து

    576
    0
    SHARE
    Ad

    anwaribrahim540px_3_540_360_100கோலாலம்பூர், அக் 7 – பினாங்கு மாநிலத்தில் ஜசெக கட்சி கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பரப்புகிறது என்று கூறப்படுவதை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

    மேலும் தான் அது போன்ற செயல்களை தனது கூட்டணி கட்சியிடம் கண்டதில்லை என்றும் அன்வார் உறுதிபடக் கூறியுள்ளார்.

    நேற்று செபராங் ஜெயா சந்தைக்கு வருகைபுரிந்த அன்வார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜசெக கட்சி மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆகியோருக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எதுவும் உண்மையில்லை” என்று தெரிவித்தார்.

    #TamilSchoolmychoice

    “எங்கள் கூட்டணிக் கட்சியான ஜசெக வின் கூட்டங்களிலோ அல்லது அதன் ஆவணங்களிலோ அது போன்ற குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள் எதுவும் கண்டதில்லை. உண்மையில் அவர்கள் அவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் பாஸ் கட்சியும், பிகேஆர் கட்சியும் அதை அனுமதிக்காது” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.