Home 13வது பொதுத் தேர்தல் இனி அம்னோவிடம் மண்டியிடமாட்டோம்! தவறு செய்தால் சுட்டிக்காட்டுவோம்! – மா சியு கருத்து

இனி அம்னோவிடம் மண்டியிடமாட்டோம்! தவறு செய்தால் சுட்டிக்காட்டுவோம்! – மா சியு கருத்து

583
0
SHARE
Ad

1-gerakanகோலாலம்பூர், அக் 24 –  இனி வரும் பொதுத்தேர்தல்களில் கெராக்கான் வெற்றி பெற்று தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், தேசிய முன்னணியின் அரசியல் கொள்கைகள் நடைமுறைக்கு சாத்தியமானதா என்று அதன் நம்பகத்தன்மையை ஆராய வேண்டும்.அப்போது தான் கெராக்கான் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் போக்க முடியும் என்று கெராக்கான் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ள மா சியு கியோங் தெரிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கெராக்கான் கட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள மா, “நம்முடைய கண்ணோட்டத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இனி வரும் பொதுத்தேர்தல்களில் கெராக்கான் வெற்றி பெறுவது மிகவும் கடினம்” என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த இரு பொதுத்தேர்தல்களிலும் கெராக்கான் படுதோல்வியைச் சந்தித்ததற்கு அம்னோ தான் முழுக்காரணம் என்று கூறவில்லை, ஆனால் அதுவும் ஒரு காரணம் என்றும் மா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கெராக்கான் அம்னோவின் பிடியில் இருக்கிறது என்று மக்களின் மனதில் தொன்றியுள்ள ஒரு எண்ணத்தை மாற்ற வேண்டும் என்றும் மா குறிப்பிட்டார்.

அத்துடன், தாங்கள் எந்த கட்சிக்கும் எதிராக கருத்துக்களை கூறவில்லை என்றும், தவறு செய்தால் அது கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் சுட்டிக் காட்டுவோம் என்றும் மா தெரிவித்தார்.

கெராக்கான் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு கெடா மாநில கெராக்கான் தலைவர் சியா சூன் ஹாய் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.