Home உலகம் அமெரிக்க பாராளுமன்றத்தில் தீபாவளி தீர்மானம்: முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டாடுகிறார்கள்

அமெரிக்க பாராளுமன்றத்தில் தீபாவளி தீர்மானம்: முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டாடுகிறார்கள்

803
0
SHARE
Ad

1374921620us_27

வாஷிங்டன், அக் 30- அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. செனட் சபையில், செனட் இந்திய குழுவின் துணைத்தலைவர்களான மார்க் வார்னர், ஜான் கோர்னின் ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

அதில்  உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதல்முறையாக, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் என்றும், அதில் இரு அவைகளின் நாடளுமன்ற உருப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

#TamilSchoolmychoice

இதுபோல், அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், கடந்த வாரம் ஜோ கிரவுலி, பீட்டர் ரோஸ்கம் ஆகியோர் தீபாவளிக்கு ஆதரவான தீர்மானத்தை தாக்கல் செய்தனர். அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் சார்பிலும் இத்தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.