Home நாடு சுங்கை லிமாவில் இன்று இடைத்தேர்தல்! வாக்களிப்பு தொடங்கியது!

சுங்கை லிமாவில் இன்று இடைத்தேர்தல்! வாக்களிப்பு தொடங்கியது!

438
0
SHARE
Ad

mole-Sg-Limau-By-electionகெடா, நவ 4 – கெடா மாநிலம் சுங்கை லிமாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸிஸான் அப்துல் ரசாக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இன்று  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி வேட்பாளர் நியமனம் நடைபெற்ற பின்னர், தேர்தல் பிரச்சாரங்கள் 12 நாட்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி தொடங்கி வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.

பாஸ் வேட்பாளராக ஜெராய் தொகுதி பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் அஸாம் சமட் (வயது 37) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய முன்னணி வேட்பாளராக பேராசிரியர் டாக்டர் அகமட் சொஹைமி லாஸிம் (வயது 52) போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அஸிஸான், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஃபாசில்லா முகமட் அலி மற்றும் இரு சுயேட்சை வேட்பாளர்களை தோற்கடித்து, 13, 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் தீவிர நீரிழிவு நோயின் காரணமாக அஸிஸானுக்கு கடந்த மே மாதம் இரண்டு கால்களையும் முட்டிக்கு கீழ் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பிறகும், நோயில் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த அஸிஸான் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி  சுல்தானா பாஹியா மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று இரவு அறிவிக்கப்படும்.