Home இந்தியா ஹெலன் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது: மசூலிப்பட்டினத்தில் கனமழை

ஹெலன் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது: மசூலிப்பட்டினத்தில் கனமழை

508
0
SHARE
Ad

Tamil-Daily-News_37071955205

சென்னை, நவ 22- வங்க கடலில் உருவான ஹெலன் புயல் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது மேற்கு நோக்கி சென்றுகொண்டிருக்கும் புயல் வலுவிழக்காமல் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. கரையை கடந்தபின்னரும் 6 மணி நேரத்துக்கு மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசும். அதன்பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கத் தொடங்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

புயல் காரணமாக அடுத்த 6 மணி நேரத்துக்கு தெலுங்கானா பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் கரை கடந்ததையடுத்து அப்பகுதியில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்ததில் ஸ்ரீதனப்பள்ளி, பந்தர் ஆகிய இடங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

புயல் எச்சரிக்கையையடுத்து ஏற்கனவே ஆந்திராவின் வடகிழக்கு கடலோர பகுதிகளில் உள்ள 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்காக சுமார் 20 குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.