Home நாடு “ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பிரதமர் உறுதி”- வேதமூர்த்தி தகவல்

“ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பிரதமர் உறுதி”- வேதமூர்த்தி தகவல்

597
0
SHARE
Ad

Waythamurthyகோலாலம்பூர், நவ 25 –  பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஹிண்ட்ராப் இயக்கம், தேசிய முன்னணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவெற்றப்படும் என்று பிரதமர் உறுதிமொழி அளித்திருப்பதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார்.

பத்துமலை வளாகத்தில் நேற்று நடந்த ஹிண்ட்ராப் இயக்கத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய வேதமூர்த்தி, “நேற்று முன் தினம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்தேன். ஹிண்ட்ராப் முன்மொழிந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice