Home நாடு சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக டிசம்பர் 16 ல் ஆர்ப்பாட்டம்!

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக டிசம்பர் 16 ல் ஆர்ப்பாட்டம்!

615
0
SHARE
Ad

articlesSeputeh_protest_(2)_1811_600_399_100கோலாலம்பூர், நவ 28 – கோலாலம்பூர் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் சொத்து உரிமையாளர்கள் அனைவரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் டிசம்பர் 16 ஆம் தேதி கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (DBKL) தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்ப்பவர்கள் தங்கள் ஆட்சேபணைகளை வரும் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஒருநாள் முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தும் முடிவு அடுத்த வருடம் மார்ச் மாதம் தான் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.