Home இந்தியா திருப்பதி கோவிலை தாக்க தீவிரவாதிகள் சதி திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

திருப்பதி கோவிலை தாக்க தீவிரவாதிகள் சதி திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

627
0
SHARE
Ad

tirupati-balaji-photos-tirumala-228925

நகரி, நவம்பர் 28– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இந்தியர்களின் முக்கிய தலமான திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோவிலில் ஏற்கனவே ரகசிய கேமராக்கள் வைக்க பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது ராணுவ வீரர்கள், காவற்படை, கண்காணிப்பு, அதிகாரிகள் கோவிலுக்கு அருகே தயார் நிலையில் உள்ளனர். ‘ஆக்டோபஸ் கமாண்டோ பணியினர்’ சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீர்த்த குளம், வராகசாயி கோவில், மாட வீதிகள், அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்துமிடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள். திருமலைக்கு வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தியே தரிசனத்துக்கு அனுப்புகின்றார்கள்.

நேற்று பக்தர்களின் வருகை மிக குறைவாக இருந்தது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 25,541 பக்தர்களே ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தர்ம தரிசனம் 6 மணி நேரத்தில் முடிந்தது கூடுதல் லட்டு சீட்டு வாங்கும் பக்தர்களுக்கு 15 நிமிடங்களிலேயே லட்டு பிரசாதம் வாங்க முடிந்தது. நேற்று ஒரு நாள் உண்டியல் வருவாய் ரூ. 1.79 கோடி கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.