கோலாலம்பூர், டிச 4 – அரசாங்க நிறுவனங்களிலும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும், மாநில் அம்னோ தொடர்புக் குழுக்களிலும் மகளிருக்கு அதிக இடங்கள் வேண்டும் என்று அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அவரது அறிக்கையில், அம்னோவில் ஆண்களுக்குத் தான் பல உயர் பதவிகள் கொடுக்கப்படுகிறது என்றும், மகளிருக்கு அந்தத் தகுதிகள் இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கட்சியின் கிளை பணிகளுக்கு மட்டுமே அவர்கள் மகளிர் பிரிவைத் தேடுகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்களில் மகளிர் அணி தேவையிருப்பதில்லை என்றும் ஷரிசாட் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோவின் போராட்டம் மற்றும் பலம் இரண்டிற்குமே மகளிர் தான் காரணம். எனவே மகளிர் பிரிவிற்கு முக்கியப் பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஷரிசாட் கூறியுள்ளார்.
“அரசாங்கம் நிறுவனங்களில் இயக்குனர்களாக, தலைவர்களாக இருக்கும் தகுதி மகளிருக்கு இல்லையா? என்றும் ஷரிசாட் கேள்வி எழுப்பியுள்ளார்.