Home உலகம் நெல்சன் மண்டேலா காலமானார்!

நெல்சன் மண்டேலா காலமானார்!

505
0
SHARE
Ad

jacobZuma_1416346cஜோஹன்னஸ்பர்க், டிச 6 – முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா  நேற்று தனது 95 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இது குறித்து நடப்பு தென்னாப்பிரிக்கா தலைவர் ஜேக்கப் ஜூமா (படம்) கூறுகையில், “எங்களுடைய அன்பிற்குரியவரும், இந்த தேசத்தில் ஜனநாயகத்தை விதைத்தவருமான மண்டேலா இயற்கை எய்தினார். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து விட்டோம். இந்த நிலை வரும் என்று ஏற்கனவே தெரியும். ஆனாலும் இது மிகப் பெரிய இழப்பு  என்ற உணர்வு குறைந்துவிடவில்லை. அவரது தளராத சுதந்திர போராட்டம் தான் அவர் மீது இந்த உலகிற்கு பெருமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பணிவு, பேரார்வம், மனிதாபிமானம் இவை தான் இத்தனை அன்பை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, முழு மரியாதையோடு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் ஜூமா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice